திங்கள், 14 ஜனவரி, 2013

கேணல் சார்ள்ஸ்: வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே நடந்த எல்.ரீ.ரீ.ஈ யின் தாக்குதல்களுக்கு சூத்திரதாரியான புலி. (2)

1987 மே மாதத்தில் பாதுகாப்பு படையினரால் ஒப்பறேசன் லிபறேசன் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயம் சாள்ஸ் முறையான போராட்டத்தில் ஈடுபட்டார். வடமராட்சி பிரதேசத்தின் பெரும்பகுதியை இதில் இராணுவம் திரும்ப கைப்பற்றிக் கொண்டது. எல்.ரீ.ரீ.ஈ இராணுவத்தால் நெல்லியடி மத்திய கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்ட முகாம்மீது, ஜூலை 5ல் ஓர் எதிர்தாக்குதலை மேற்கொண்டது. மேஜர் கமால் இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். சாள்சும் இந்த தாக்குதலில் பங்குபற்றினார். எல்.ரீ.ரீ.ஈயின் முதல் தற்கொலைத் தாக்குதலுடன் இராணுவத்தின்மீதான அடி ஆரம்பமானது. கப்டன் மில்லர், வெடிமருந்து நிரம்பிய ஒரு ஊர்தியை முகாமுக்குள் கொண்டுசென்று மோதி வெடிக்க வைத்தார்.

இந்திய இராணுவத்தின் வருகையுடன் புதிய மோதல்கள் எழுந்தன. இந்திய அமைதி காக்கும் படையுடன் எல்.ரீ.ரீ.ஈ போர் தொடுத்தது. சாள்ஸ், யாழ்ப்பாண குடாநாட்டிலேயே தங்கியிருந்து கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார். அவர் வடமராட்சி கிழக்கில் கப்டன் மொரிஸ் தலைமையில் உள்ள பிரிவில் நிலைகொண்ருந்தார்.

பொட்டு அம்மானின் மெய்ப்பாதுகாவலரான கிளி என்பவர்தான் முதன்முதலாக சாள்சை உளவுத்துறை தலைவருக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சாள்ஸின் திறமையால் கவரப்பட்ட பொட்டு அவரை வன்னிக்கு மாற்றினார். வன்னியில் உளவு சேகரிக்கும் தொழில்நுட்பத்தில் சாள்ஸ் சில பயிற்சிகளை மேற்கொண்டார். சாள்ஸ், மற்றும் சில உளவுத்துறை செயற்பாட்டாளர்களுடன் சேர்த்து எல்.ரீ.ரீ.ஈ யின் சில இரகசிய இருப்பை நிறுவுவதற்காக கொழும்புக்கு 1990 களின் ஆரம்பத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நேரத்தில்தான் பிரேமதாஸ அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியிருந்தன. சமாதான ஒப்பந்தம் ஜூன் 1990 ல் முறிவடைந்து போர் வெடித்தது. சாள்ஸ், வடபகுதிக்கு திரும்பினார். எப்படியாயினும் அங்கு ஒரு புதிய சவால் தோன்றியிருந்தது.கிளிநொச்சியில் தனது முன்னாள் உதவியாளரின் இறுதிச்சடங்கில் பேசும்போது,பொட்டு அம்மான் அது தொடர்பான விபரங்களை தெரிவித்தார். முன்னாள் உதவி பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்னாவினால் கொலை முயற்சி ஒன்றை மேற்கொள்வதற்கான ஒரு சதி நடந்து வருவது பற்றிய தகவல் ஒன்றை எல்.ரீ.ரீ.ஈ வெளிப்படையாக அறிய நேர்ந்தது.பிரபாகரனின் மனைவி மதிவதனி அடிக்கடி நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். அந்தக் கொலை முயற்சி சம்பந்தமான சதி இது தொடர்பானதுதான்.

கூட்டுப் படைத் தலைமையகம் அந்தக் கொலைக்குப் பிறகு பாரிய தாக்குதலை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ இதனால் மிகவும் கோபமடைந்திருந்தது. கொழும்புக்கு ஒரு கசப்பான பாடம் கற்பிக்கவேண்டும் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

சாள்சுக்கு,அப்போது பத்தொன்பது வயதே ஆகியிருந்தது, அந்தப் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.1991 ஜனவரியில் சாள்ஸ், கொழும்புக்கு நகர்ந்தார் மற்றும் தாக்குதல் நடவடிக்கையை தொடர இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. சில வாரங்களுக்குள்ளாகவே எல்.ரீ.ரீ.ஈ கொழும்பில் தாக்குதலை நடத்தியது. கூட்டுப் படைத் தலைமையகம் தகர்க்கப்பட்டது. ரஞ்சன் விஜேரட்னா ஒரு கார் குண்டுத் தாக்கதலில் கொல்லப்பட்டார்.இது வெறும் ஆரம்பம் மட்டுமே. சாள்ஸ், எல்.ரீ.ரீ.ஈயில் ஒரு முகம் தெரியாத நபராக இருந்தபடியால் 1997 வரை அவர் கொழும்பில் ஒரு மறைவான நிலையில் இருந்தார். அவர் கொழும்பில் ஏன் மறைவாக இருந்தார் என்கிற விடயம் அப்போது தெரியவில்லை.இந்த காலகட்டத்தில் அவர் வடக்குக்கும் கொழும்புக்கும் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு முக்கிய அறிவுரைகளை பெற்றுக்கொண்டு உடனடியாக திரும்பி வந்து விடுவதாக கருதப்பட்டது.

பொட்டு அம்மானின் கீழ் பணியாற்றிய போதிலும், சாள்ஸ், கொழும்பிலும் இதர வெளியிடங்களிலும் எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு இரகசிய இருப்பை கட்டியெழுப்புவதற்கான ஒரு பிரதான கருவியாக இருந்தார்.பாதுகாப்பான மறைவிடங்களை அமைத்தல்,உளவாளிகள்,மறைவான களஞ்சியங்கள்,மாறுவேடத்தில் தங்கும் அங்கத்தவர்களை பாதுகாத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தியதுடன்,உளவு சேகரித்தல், பாதுகாப்பு படையினரை தம்பக்கம் வளைத்துப் போடல்,வசதியான பாதைகளை நிறுவுதல் போன்ற ஏனைய பணிகளும் அவரது மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வந்தது.

முன்னாள் கடற்படை தளபதி கிளன்சி பெர்னாண்டோ,லலித் அத்துலத்முதலி,ரணசிங்க பிரேமதாஸ,காமினி திசாநாயக்க, வீரசிங்க மல்லிமாராச்சி, ஜி.எம் பிரேமச்சந்திரா, தாமினி விஜேசேகர, ஓசி அபேகுணசேகர போன்றவர்களின் தொடரான படுகொலைகளை கொழும்பில் திட்டமிட்டு,ஒருங்கிணைத்து நடத்துவதிலும் சாள்ஸ் ஓரு முக்கிய பங்கு வகித்தார். கொலன்னாவ எண்ணெய் குதம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றின் தாக்குதல்களின் சதிமுயற்சி நடவடிக்கைகளிலும் அவரது பங்கு இடம்பெற்றிருக்கிறது.

கொழும்பில் அவரது பிரசன்னம் இருக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகள் அறிய நேர்ந்ததும், சாள்ஸ்,1997ல் கிழக்குக்கு திரும்பினார்.அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் இருந்துகொண்டு அவர் தெற்கில் இரகசிய நடவடிக்கைகளை செயற்படுத்த தொடங்கினார். கிழக்கில் அப்போது நிலைகொண்டிருந்த மூத்த எல்.ரீ.ரீ.ஈ உளவுத்துறை அதிகாரிகளான நியுட்டன்,ரமணன்,மனோ,நிசாம்,கீர்த்தி,நீலன், போன்றவர்களுடன் அவர் பணியாற்றினார்.

1997 – 2000 வரையான காலப் பகுதியில் சாள்ஸ், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதியில் இருந்தார். இந்த காலகட்டத்தில் கொழும்பில் நடைபெற்ற பல நடவடிக்கைகளின் பிரதான மூளையாக அவர் இருந்தார்.இதில் ஸ்ரீ.ல.சு.க அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான சி.வி.குணரத்ன,தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்,கலாநிதி நீலன் திருச்செல்வம்,மற்றும் முன்னாள் இராணுவ தளபதி லக்கி அல்கம போன்றவர்களின் கொலையும் உட்படும்.

சந்திரிகா குமாரதுங்க மீது மேற்கொண்டு தோல்வியில் முடிந்த கொலை முயற்சியிலும் அவரது பெயர் பதியப்பட்டுள்ளது.இந்தக் கட்டத்தில்தான் எல்.ரீ.ரீ.ஈ யின் பெரும்பாலான கொழும்பு நடவடிக்கைகளில் கிழக்கின் தொடர்பு இருந்தது. வெளியிட நடவடிக்கைகளின் தலைவராக செயற்படும் சுதந்திரம் சாள்சுக்கு பெருமளவு வழங்கப்பட்டிருந்த போதிலும்,அவர் பொட்டு அம்மானின் கீழ் நேரடியாக கடமையாற்றினார்.பெயரளவில் அவர் பொட்டு அம்மானின் அதி மூத்த உதவியளராக இருந்தார்.

ஆனால் 2000ல் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் கடினமான சவாலான ஒரு புதிய பணியில் அவரை ஈடுபடுத்தினார்கள். அந்த இலக்கு கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை தாக்கி விமானங்களை அழிப்பது என்பதே. இது சாள்ஸின் தனிப்பட்ட பொறுப்பாக இருந்தது. இது பற்றிய அறிவுள்ள தமிழ் வளங்களின் கூற்றுப்படி,இதற்காக சாள்ஸ், ஒரு சுயாதீனமான குழவை அமைத்திருந்தார் என்று தெரிகிறது.

சாத்தியமான குழப்பங்கள்,மற்றும் அடையாளம் காணுதல் என்பனவற்றை தவிர்க்கும் பொருட்டு அப்போதிருந்த எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வு இயந்திரத்தை இதில் பயன்படுத்துவது முற்றாக தவிர்க்கப்பட்டது.அதற்கு பதிலாக சாள்ஸ்,நீர்கொழும்பில் இருந்து கொண்டு ஒரு புதிய வலையமைப்பை நிறுவினார். 24 ஜூலை 2001ல் எல்.ரீ.ரீ.ஈ கட்டுநாயக்காவை தாக்கி பல விமானங்களை நிர்மூலமாக்கியது. 14 புலிகள் இதன்போது கொல்லப்பட்டார்கள். ஒரு பொதுமகனுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. குமாரதுங்க அரசாங்கம் ஒரு மாபெரும் பின்னடைவை சந்தித்தது.ஒருவேளை இது கேணல்.அருள்வேந்தனின் மூடி சூடத்தக்க ஒரு சாதனை என்று சொல்லலாம். இருந்தும் சாள்சின் மரணத்தில் அவரது புகழுரையை வாசித்த பொட்டு அம்மான் அப்போது சாள்ஸ், தன்னிடம் ‘அம்மான் எதிர்காலத்தில் கட்டுநாயக்காவை விட பெரிய சாதனைகள் எல்லாம் இடம்பெறும்’ என்று கூறியதாக தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் பெப்ரவரி 2002ல் இடம்பெற்ற யுத்த நிறுத்தம் திரும்பவும் சாள்சின் செய்பாடுகளின் மீள் விளையாட்டை கண்டது. கேணல்.அருள்வேந்தன் மீண்டும் ஒரு முறை தன்னால் முன்பு செய்ததை போல திறமையாக செயற்பட முடியும் என நிரூபித்தார்.

கொழும்பிலும்,அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் வெளியிடங்களிலும், எல்.ரீ.ரீ.ஈயின் இரகசிய வலையமைப்பை மறுசீரமைத்து, புதுப்பித்து,மற்றும் மீள நிறுவும்படி சாள்சுக்கு கட்டளையிடப்பட்டது.காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை என்பனவற்றில் உள்ள பல சிங்கள அதிகாரிகளை வளைத்தெடுக்கும் பணியும் இதில் உட்படுத்தப் பட்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈயை சேராத வேறு குழுக்களின் முக்கிய அங்கத்தவர்கள் மற்றும் அரசாங்க உளவுத்துறை வலையமைப்பிலிருந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆகியோரையும் அவர் ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது.யுத்த நிறுத்தம் இத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்திருந்ததையும் பொருட்படுத்தாமல் இப்படியான கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

2004ல் அவர் வன்னிக்கு திரும்ப அழைக்கப்பட்டு இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.இது எனென்றால் 2005ன் அரம்பத்தில் பிரபாகரன் திரும்பவும் போரை ஆரம்பிக்க தீர்மானித்திருந்தார் என்பதினாலேயே.சாள்சுக்கு அனைத்து பாதுகாப்பு நிலைகளையும் கண்காணித்து தேவையான புலனாய்வு தகவல்களை பெறவேண்டியதாக இருந்தது அத்துடன் செயற் திட்டங்களுக்கான நடவடிக்கைகளை வகுப்பதிலும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். சாள்ஸ், அல்லது அருள்வேந்தன் இப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் சுயாதீனமான தலைவராக இருந்தார்.

பிரபாகரனின் திட்டத்தை 2004 டிசம்பர் 26ல் ஏற்பட்ட சுனாமி தாமதப்படுத்தியது.இதற்கிடையில் சாள்ஸ், இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.அத்துடன் அவர் பொட்டு அம்மானின் சில விசேட பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

ஆர்.ஜெயதேவன் மற்றும் ஏ.விவேகானந்தன் என்கிற இரு பிரித்தானியத் தமிழர்கள்,லண்டனில் உள்ள ஈழபசுபதிஸ்வரர் இந்து ஆலய விவகாரம் சம்பந்தமாக எல்.ரீ.ரீ.ஈ யினரால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை பல புலி அங்கத்தவர்கள் விசாரணை செய்தார்கள்.அவர்களில் கண்ணன் என்று அழைக்கப்படும் ஒருவரும் இருந்தார். சாள்ஸ், கொல்லப்பட்டதன் பின் அவரின் படத்தை ஊடகங்களில் பார்த்த ஜெயதேவன், கண்ணன் என்கிற பெயரில் தங்களை விசாரித்தவர் அவர்தான் என்பதை அறிந்து கொண்டார்.தங்களை விசாரித்தபோது அவர் நடந்துகொண்ட மரியாதையான முறையை பற்றிப் புகழ்வதில் ஜெயதேவன் ஒரு சாதனையையே நிகழ்த்திவிட்டார்.

இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த சாள்ஸ், அனுராதபுர விமானத் தளம் தொடர்பான தகவல்களை திரட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அந்த தாக்குதலுக்கான திட்டங்களை வகுப்பதிலோ அதை நடத்துவதிலோ அவர் சம்பந்தப் படவில்லை.ஹபறணவில் கடற்படை வீரர்கள்மீது மேற்கொண்ட தாக்குதல் மற்றும் காலித் துறைமுகத்தின்மீது மேற்கொண்ட தாக்குதல் என்பனவும் சாள்ஸின் திறமையான வேலைகளே.

காலி தாக்குதலுக்காக கடற் கரும்புலிகளுக்கு பயிற்சி அளித்து அந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் சாள்ஸ், பெரும் பொறுப்பு வகித்தார் என கடற்புலி தளபதி சூசை பெருமையுடன் நினைவுகூர்ந்தார். தென்னிலங்கையின் உள்ளே கடற்கரும்புலிகள் ஒரு தாக்குதலை நடத்தியது அதுதான் முதல்முறை.

அபாயகரமான பல மனிதர்களின் விடயத்திலுள்ளது போலவே சாள்ஸ், அவர்களும் இனிமையான சுபாவமுள்ள ஒரு பிரமிப்பூட்டும் மனிதராவார்.அவரோடு பழகியவர்கள்,அவருடன் தொடர்பு கொள்வது வெகு எளிது என்று கூறுகிறார்கள்.அவர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் பனடோல் மாத்திரைகளை ஒழுங்காக பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.அதனால் அவரது சக எல்.ரீ.ரீ.ஈயினர் அவரை பனடோல் என குறிப்பிடுவார்களாம்.

பாதுகாப்பு படையின மன்னார் – வவுனியா எல்லையில் பாரிய தாக்குதலை நடத்த ஆரம்பித்ததும் தான் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதை எல்.ரீ.ரீ.ஈ கண்டு கொண்டது. மீண்டும் ஒருமுறை சாள்ஸின் விசேட நிபுணத்துவம் அதற்கு அவசியப்படுகிறது. அவர் சிறப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார், அது சோதனையான வேளைகளில் எதிரிகளின் இலக்குகள்மீது திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளும் தன்மையுடையது. இந்த புதிய பணி தொடர்பாக பணயம் மேற்கொண்ட வேளையிலேயே அவர் மரணத்தை சந்தித்தார்.

அவரது உடலை வன்னியின் பல இடங்களில் காட்சிக்கு வைத்தபின்னர் எல்.ரீ.ரீ.ஈ அவருக்கு பிரமாண்டமான இறுதிச் சடங்கை நிகழ்த்தினார்கள்.

சண்முகநாதன் ரவிசங்கர் என்கிற கேணல் அருள்வேந்தன், எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவ மரியாதைகளுடன் கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள மாவீரர் துயிலும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

சாள்ஸ், அழிவுகளை ஏற்படுத்திய ஒரு மனிதராக இருந்தாலும் தனித்துவமான ஒரு மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை எல்.ரீ.ரீ.ஈக்கு அவர் ஒரு மிகப்பெரிய சொத்தாகவும் இருந்தார்.

டி.பி.எஸ்.ஜெயராஜ்


மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல